தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்முறை செய்து அதனை வீடியோவாக எடுத்து மிரட்டி பல லட்சம் மோசடி செய்த வழக்கில் காசி குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் அந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் நீதிமன்ற அனுமதி பெற்று போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவனது கூட்டாளிகள் பற்றிய விவரம் தெரியவந்ததையடுத்து கன்னியாகுமரியை சேர்ந்த விசைப்படகு உரிமையாளரான தினேஷ் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
விசாரணைக்கு பின்னர் அவனுக்கு நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் பலரை ஏமாற்றி பணமோசடி செய்த வழக்கில் தடயங்களை அழித்ததாக காசியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட காசியின் தந்தை தங்க பாண்டியனிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்






0 Comments