குமரி மாவட்ட ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் சாமிதோப்பில் கொரோனா நிவாரண உதவிகள்
Alif Newson -
Tuesday, June 02, 2020
உலகத்தை அச்சுருத்தும் கொரோனோ நோயினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையான அரசின் ஊரடங்கு உத்தரவு காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் ஏழைகளுக்கு உணவுக்கான பொருட்கள் வழங்கும் நிகழ்வு கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் மாவட்டம் முழுவதும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது
அதன் தொடர்ச்சியாக தற்போது மதநல்லிணக்கத்திற்க்கு முன்னுதாரணமாக வருமையில் வாடும் கிருஸ்தவ மற்றும் ஹிந்து சகோதரர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் உணவுக்கான அரிசி, காய்கறிகள்,பழங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றுவருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று சாமிதோப்பு அய்யா வைகுண்டர் பதி அருகில் உள்ள ஏழைகளுக்கு சாமிதோப்பு அய்யா வைகுண்டபதயில் வைத்து ஏழைகளுக்கு அரிசி, காய்கறிகள், பழங்கள் கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு உகாண்டா மண்டலத்தின் உறுப்பினர் M.S.சலீம் அவர்களின் ஏற்பாட்டில் வழங்கபட்டது.
நிகழ்வுக்குக்கு தலைவர் M.இப்ராஹீம்கான் தலைமையேற்றார். பொதுச் செயலாளர் P.ஹிமாம் பாதுஷா ஏழைகளுக்கு உணவுக்கான பொருட்கள் வழங்கி நிகழ்வை துவங்கிவைத்தார்.
பொருளாளர் H. நசீர் உசைன் மற்றும் துணைத் தலைவர் S.R.ஹாஜி பாபு Frmc, தலைமைப்பதி சுவாமிதோப்பின் நிர்வாகக் குரு. பால.ஜனாதிபதிBSc.B.L , நாடார் மக்கள் பேரவை கொள்கை பரப்புச் செயலாளர் சுபாஷ், மற்றும் ஜமீன் மணிமாறன் ஆகியோர்
முந்நிலைவகித்தனர்.
நிகழ்வில் மாநகரத் தலைவர் ஜாஹிர் ஹீசைன், மாநகரச் செயலாளர் . M. சேக் முஹம்மது , மாநகரத் துணைச் செயலாளர் . சேக் செய்யது அலி, மாநகர தகவல் தொழில் நுட்பப் பிரிவைச்சார்ந்த அய்யூப் கான்&நாசர் அலி, இளைஞர் அணியைச் சார்ந்த கோட்டையடி ரஹீப் பாதுஷா&சாதிக் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
0 Comments