மக்கள் நலப்பணிகளில் வீறுநடை போடும் கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பின் அதிரடி பணிகளின் தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் ஆட்டோ கார் மற்றும் வாகன ஓட்டுநர்கள் நலச்சங்கம் ஒவ்வொரு ஊர்களிலும் உருவாக்கி அவர்களின் நலன்களை பேணி பாதுகாக்கும் பணிகளில் இறங்கியது.
முதன்முதலாக கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் அமைப்பு திருவிதாங்கோடு ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் 20 உறுப்பினர்களை கொண்டு நேற்று மாலை 7 மணிக்கு திருவிதாங்கோட்டில் துவங்கப்பட்டது.
சங்கத்தின் தலைவராக அன்சாத் அவர்களும், செயலாளராக அன்சில் அவர்களும், துணைத்தலைவராக அப்துல் சலாம் அவர்களும், பொருளாளராக சரபுதீன் அவர்களும்,துணைச் செயலாளராக சதீஸ் அவர்களும், மற்றொரு துணைச் செயலாளராக முகமது சிஹாம், அவர்களும் செயற்குழு உறுப்பினர்களாக சாகுல் ஹமீது அவர்களும், முகமது சமீம் அவர்களும், அருண் அவர்களும், தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் கூட்டமைப்பின் நிறுவனத்தலைவர் இப்ராஹிம் கான், தலைவர் மீரான் மைதீன், பொதுச்செயலாளர் ஹிமாம் பாதுஷா, பொருளாளர் நசீர் உசேன், துணைச்செயலாளர் (activities) எஸ் ஆர் ஹாஜி பாபு ,தக்கலை நகரத் தலைவர் செய்யது அலி, இளைஞர் அணி மாவட்ட துணைச் செயலாளர் அஸ்கர், உறுப்பினர் ரைசுத்தீன், மற்றும் திருவிதாங்கோடு கிளை தலைவர் செய்யது அலி , செயலாளர் அமானுத்தீன், பொருளாளர் சபீக், மற்றும் ஆட்டோ ஓட்டுனர் நல சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு திருவிதாங்கோடு ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கத்தின் புதிய நிர்வாகிகளை கூட்டமைப்பின் தலைமை நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்கள்






0 Comments