இந்தோ- சீனா எல்லை கல்வான் பள்ளத்தாக்கில், சீன வீரர்கள் தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இது தொடர்பாக பிரதமர் மோடி நடத்திய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், சீனா நமது எல்லைக்குள் ஊடுருவவில்லை எனவும், நமது நிலைகளைக் கைப்பற்றவில்லை என்றும் பேசினார்.

பிரதமர் மோடியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
பிரதமரின் வார்த்தைகள் சீன தரப்பின் நியாயத்திற்கு வலுசேர்க்கும்படி அமைந்துவிடக் கூடாது எனவும், இந்த விவகாரத்தில் தவறான தகவல்களை வழங்குவது ராஜதந்திரமாகாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் 20 ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்காவிடில் அது வரலாற்று துரோகம் ஆகிவிடும் என்று மன்மோகன் சிங் சாடியிருக்கிறார்.






0 Comments