கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக தாமரைக்குளம் நவ்மியாப்புறம் முஸ்லிம் ஜமாத் ஊர் மக்களுக்கு கொரோனோ தடுப்பு ஹோமியோபதி மருந்து மற்றும் முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நிறுவனத் தலைவர் இப்ராஹிம் கான் தலைவர் மீரான் மைதீன் பொதுச்செயலாளர் ஹிமாம் பாதுஷா ஆகியோர் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. நவ்மியாபுரம் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் முகமது ராசிக் கொரோனோ தடுப்பு ஹோமியோபதி மருந்தினை அனைவருக்கும் வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
கொரோனோ தடுப்பு ஹோமியோபதி மருந்தினை எப்படி எடுத்துக் கொள்வது என்று மாஞ்சா குடியிருப்பு சித்த ஆயுர்வேத ஹோமியோபதி மருத்துவமனை மருத்துவர் பிரேம்குமார் அவர்கள் அனைவருக்கும் விளக்கமளித்தார்
பொருளாளர் நசீர் உசைன் முககவசம் வழங்கி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஆக்டிவிட்டீஸ் துணைச் செயலாளர் எஸ் ஆர் ஹாஜிபாபு , நாகர்கோவில் மாநகர தலைவர் ஜாகிர் உசேன், நாகர்கோவில் மாநகர தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் எஸ் அயூப்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மனநல ஆலோசகர் டாக்டர் அரிமா ராஜன், மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் முகமது அஸ்கர், முகமது சாதிக், மாநகர துணை செயலாளர் செய்யது அலி, கோட்டையடி கிளைத் தலைவர் ரஹீப் பாதுஷா, உறுப்பினர் ரைசுதீன் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்






0 Comments