கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு மற்றும் ஐ.எஸ்.இ.டி பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகமும் இணைந்து இன்று ஐ.எஸ் இ.டி ,பாத்திமா நகர், பிஸ்மி நகர் போன்ற இடங்களிலுள்ள அனைவருக்கும் உலகை அச்சுறுத்தும் கொரோனோ தொற்று அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றிக்கொள்ள கொரோனோ தடுப்புமருந்து மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி ஐ.எஸ்.இ.டி பள்ளிவாசல் அருகில் வைத்து நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நிறுவனத் தலைவர் இப்ராஹிம் கான், தலைவர் மீரான் மைதீன், பொதுச்செயலாளர் ஹிமாம் பாதுஷா தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
பொருளாளர் நசீர் உசேன், துணைச்செயலாளர் (activities)S R ஹாஜி பாபு Fr.MC, துணைச் செயலாளர் S.M. மாஹீன், ஐ.எஸ்.இ.டி.ஜமாஅத் தலைவர் ஜாஹிர் உசேன், செயலாளர் முகம்மது தாஹா, பொருளாளர் S.ஹைதர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநகர பொருளாளர் பசூல் கரீம் அனைவரையும் வரவேற்றார். மாஞ்சா குடியிருப்பு சித்த ஆயுர்வேத ஹோமியோபதி டாக்டர் பிரேம்குமார் கொரோனோ தடுப்பு மருந்து எப்படி சாப்பிடுவது என விளக்கம் அளித்து அனைவருக்கும் மருந்து வினியோகித்து துவங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் Ised ஜமாத் துணைத்தலைவர் Adv. முகமது அன்சாரி, துணைச்செயலாளர் முகமது ரவூப், இளைஞரணி தலைவர் ரஸீம்,ஓய்வு பெற்ற அதிகாரி மஜீத்,ISED மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாக அலுவலர் அக்பர், மனநல ஆலோசகர் Dr.ராஜன்,ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகிகள் மாநகர தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் S. அயூப் கான்,துனை தலைவர் ரபீக், திருவிதாங்கோடு இளைஞரணி தலைவர் பக்கா சாகுல்.உறுப்பினர் ரைசுத்தீன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் சமுதாய பெருமக்கள்,ஏராளமான தாய்மார்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.






0 Comments