கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு மற்றும் ரஹ்மத் கார்டன் பள்ளிவாசல் அறக்கட்டளை நிர்வாகமும் இணைந்து நேற்று (21-06-2020) கொரோனோ தடுப்பு மருந்து மற்றும் முககவசம் வழங்கும் நிகழ்ச்சி ரஹ்மத் கார்டன் பள்ளிவாசல் அருகில் வைத்து நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைவர் மீரான் மைதீன், பொதுச்செயலாளர் ஹிமாம் பாதுஷா, மற்றும் ரஹ்மத் கார்டன் பள்ளிவாசல் அறக்கட்டளை தலைவர் M.M. சாகுல் ஹமீது ஆகியோர் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
கூட்டமைப்பு பொருளாளர் நசீர் உசைன் துணைச் செயலாளர் (activities) S.R.ஹாஜி பாபு, மாவட்ட இளைஞரணி தலைவர் முகம்மது அயூப் கான், மாநகர தலைவர் ஜாகிர் உசேன், மாநகர துணை செயலாளர் ஷேக் முஹம்மத் ,மற்றும் ரஹ்மத் கார்டன் பள்ளிவாசல் அறக்கட்டளை செயலாளர் M.A.K.சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இன்றைய காலகட்டத்தில் கொரோனோ தாக்கத்தின் விழிப்புணர்வு குறித்தும், தாக்கம் குறித்தும், மருத்துவம் குறித்தும் டாக்டர் மோகன்தாஸ் MD அவர்கள் விளக்கம் அளித்து கொரோனோ தடுப்பு மருந்து அனைவருக்கும் வழங்கி துவக்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் கூட்டமைப்பு மாநகர தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் S.அயூப் கான், தமுமுக மாவட்ட துணைத்தலைவர் ஜெகபர் சாதிக் ,ரஹ்மத் கார்டன் அறக்கட்டளை பொருளாளர் முகைதீன் பாட்சா, இனையம் நியாஸ், டாக்டர் முஹம்மது ஷாபி, இனையம் செய்யது, அமீர் சுல்தான், நூறு முஹம்மது, அப்துல் ரஷீது, மற்றும் நூற்றுக்கணக்கான பயனாளிகள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் இறுதியில் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பு மருந்து மற்றும் முககவசம் வழங்கப்பட்டது.






0 Comments