கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் அதிரடி பணிகளின் தொடர்ச்சியாக இன்று மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வியாபாரிகளின் நன்மைக்காக வேண்டி ஒவ்வொரு ஊர்களிலும் கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு வர்த்தகர்கள் நலச்சங்கம் துவங்குவது என தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானத்தின்படி இன்று திருவிதாங்கோட்டில் 37 கடைகளின் உரிமையாளர்களை கொண்டு கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு திருவிதாங்கோடு வர்த்தகர்கள் நலச்சங்கம் இன்று மாலை 7 மணிக்கு துவங்கப்பட்டது இந்த சங்கத்தின் தலைவராக செய்யது அலி அவர்களும், செயலாளராக முஹம்மது ஆமீன் அவர்களும், பொருளாளராக ஷாஜகான் அவர்களும், துணைத்தலைவராக ஷாஜி அவர்களும், துணைச் செயலாளராக அப்துல் முனீர்அவர்களும், செயற்குழு உறுப்பினர்களாக முஸம்மில் அவர்களும், ஹாஜாமைதீன் அவர்களும் ஷாஜகான் அவர்களும் சஜீப் அவர்களும், முஹம்மது அனீஸ் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நிறுவனத் தலைவர் இப்ராஹிம் கான், தலைவர் மீரான் மைதீன், பொதுச் செயலாளர் ஹிமாம் பாதுஷா, பொருளாளர் நசீர் உசேன், ஆக்டிவிடீஸ் துணைச்செயலாளர் எஸ் ஆர் ஹாஜி பாபு, துணைத் தலைவர் பீர் முஹம்மது, நாகர்கோவில் மாநகர தலைவர் ஜாஹிர் உசேன், தக்கலை நகர தலைவர் செய்யது அலி ,மாவட்ட இஸ்லாமிய வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஷேக் அப்துல் ஹமீத், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் முஹம்மது அஸ்க்கர், உறுப்பினர் ரைசுதீன் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு திருவிதாங்கோடு வர்த்தகர் நலச்சங்க அனைத்து உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்






0 Comments