அஸ்ஸலாமு அலைக்கும்
கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் சமுதாய மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் தலைவர் இப்ராஹிம் கான் அவசரமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இன்றைய தினம் நம்பாளியை சார்ந்த சகோதரர் கான் என்பவர் எங்களது கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்புக்கு எதிராக மூன்று பேப்பர் அடங்கிய செய்தியை கெட்ட எண்ணத்துடன் பகிர்ந்துள்ளார்.
உண்மைக்குப் புறம்பான பல தகவலை அதில் கூறியுள்ளார்.
அந்த சகோதரர்களுக்கும் பொதுமக்களுக்கும் உண்மையை அறிவிக்க அதுவும் அவசரமாக அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் வாட்ஸ் அப்பில் அவசரமாக இந்த செய்தியை வெளியிடுகிறேன்.
எங்களது கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு 1/ 2007 என்ற பதிவு எண்ணுடன் 14 ஆண்டுகளாக இந்த மாவட்டத்திலுள்ள பல ஏழைகளுக்கு உதவும் வண்ணம் பல நற்செயல்களைச் செய்துவருகிறது
எங்கள் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு நாங்கள் உருவாக்கி கொடுத்த சட்டத்திற்கு உட்பட்டு(பைலா) எங்கள் கூட்டமைப்பு சீரோடும் சிறப்போடும் சென்று கொண்டிருக்கிறது.
இதை பொறுக்க முடியாமல் ஆவேசப்பட்டு, ஆத்திரப்பட்டு, பொய்யான தகவலை மக்கள் மத்தியில் பரப்பி எங்கள் செயல்பாடுகளுக்கும், நாங்கள் மக்களுக்கு செய்யும் நல் அமல்களுக்கும், தடையை உருவாக்க வேண்டுமென்ற கெட்ட எண்ணத்தில் இப்படி ஒரு முயற்சியை அன்பு சகோதரர் நம்பாளிகான் செய்துவருகிறார்.
அவரிடம் நாங்கள் வைக்கும் ஒரே கோரிக்கை நீங்கள் எங்களுக்கு வேட்டுவைக்க நினைக்காதீர்கள்.
எங்களிடம் போட்டியிட்டு இந்த மாவட்ட மக்களுக்கு பல நன்மைகளை செய்ய நீங்களும் வாருங்கள் களத்தில்.
நீங்களும் இந்த மாவட்ட மக்களுக்கு நன்மையை செய்யுங்கள். நாங்களும் இந்த மாவட்ட மக்களுக்கு நன்மை செய்கிறோம்.
நாங்கள் எந்த சுயநலத்திற்காகவும் எந்த உதவியும் இந்த மாவட்ட மக்களுக்கு செய்யவில்லை.
ஒரு கூட்டமைப்பு இந்த மாவட்ட மக்களுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் நாங்கள் செய்து காண்பித்து கொண்டிருக்கிறோம்.
இன்ஷாஅல்லாஹ் நீங்கள் பிரமிக்கும் வண்ணம், இன்னும் பல நன்மைகளையும் செய்து காண்பிக்கிறோம்,
முடிந்தால் எங்களுடன் மோதி இந்த மாவட்ட மக்களுக்கு பல நன்மைகளை நீங்களும் செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்
அதற்கு நேர் எதிர்மாறாக எங்களுடைய சேவையை திசைதிருப்பும் கெட்ட எண்ணத்தில் எந்த சதியும் செய்ய முயலாதீர்கள்,
காரணம் எல்லாம் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
அன்பு சகோதரரே !
நீங்கள் இத்தனை ஆண்டுகாலமாக அரசின் பதிவு பெறாமல், ஒரு அமைப்பை வைத்து இந்த மாவட்டத்தில் எந்த மக்களுக்கும் எந்த ஒரு பயனும் கிடைக்காமல் மாவட்டத்தில் உள்ள யாருக்கும் எதுவும் செய்யாமல், எங்கள் செயல்பாடுகளை நீங்கள் பார்த்து தயவு செய்து பொறாமை கொள்ளாதீர்கள்.
அல்லாஹ் போதுமானவன்,
அன்பு சகோதரரே உங்களுக்கு ஒன்றை தெரியபடுத்துகிறேன். 2018 ஆம் ஆண்டு அப்போதைய கலெக்டர் இந்த மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பிய மனுவை இத்துடன் இணைத்துள்ளேன்.
என்னவென்றால் கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு தலைவர் இப்ராஹிம் கான் தலைமையில் உள்ள கூட்டமைப்பு மட்டும்தான் உண்மையான கூட்டமைப்பு இதனுடைய கோரிக்கையை மட்டும் தான் அரசு கேட்க வேண்டும்.
எந்த பதிவும் பெறாத கூட்டமைப்புகளின் கோரிக்கையை ஏற்ககூடாது என்று அப்போதைய கலெக்டர் 2018ல் உத்தரவிட்டார்.
இந்த சூழ்நிலையில் இதை வெளிப்படுத்தி உங்களை அசிங்கப்படுத்த கூடாதென்ற நல்லெண்ணத்தில் நாங்கள் வெளிப்படுத்தாமல் வைத்திருந்தோம்.
இன்றைய சூழ் நிலையில் மக்களுக்கு உண்மை தன்மையை அறிய இதை வெளிப்படுத்துகிறோம். இப்போது ஏதோ பதிவு பெற்று நீங்கள் செயல்படுவதாக மீண்டும் குமரி மக்களை ஜமாஅத் காரர்களை ஏமாற்றும் எண்ணத்தில் பதிவிட்டு இருக்கிறீர்கள்.

54 ஜமாத் உங்களிடம் இருப்பதாகவும் சொல்லி உள்ளீர்கள் 54 ஜமாஅத் உங்களிடம் இருந்தால் நீங்கள் ஏன் அந்த அம்பத்தி நாலு ஜமாஅத் உடைய தலைவரை நீங்கள் இப்போது உங்களுக்கு சாதகமான ஒன்பது நபர்களை கொண்டு உருவாக்கப்பட்ட உங்கள் ஏரியாவில் உள்ள பத்திரபதிவு ஆபீஸில் யாருக்கும் தெரியாமல் டிரஸ்டாக பதிவு செய்து இன்றுதான் நம்பர் வெளியிட்ட டிரஸ்டில். அவர்களை ஏன் இணைக்கவில்லை.
ஏதோ சாதித்ததாக குமரி இஸ்லாமியர்களை ஏமாற்றும் எண்ணத்தில் பதிவிட்டு உள்ளீர்கள். மீண்டும் உங்களுக்கு ஒன்றை நான் தெரியப்படுத்துகிறேன். சொசைட்டி ஆக்டில் செயல்படும் எங்களிடம் 9 நபர்களை வைத்து டிரஸ்ட் துவங்கிவிட்டு எங்களிடம் வந்து எங்கள் பணிக்கு இடையூறு தராதீர்கள்.
இதையெல்லாம் உங்களுக்கு நாங்கள் சொல்ல வேண்டுமென்றோ உங்களை இழிவுபடுத்த வேண்டும் என்றோ எங்களது நோக்கம் அல்ல. தயவுசெய்து சொல்கிறோம் நீங்கள் எங்கள் எதிரி அல்ல. நீங்கள் எங்களிடம் மோதும் அளவிற்கு உங்களிடம் எந்த சமூக சேவையோ, மக்கள் சேவையோ, சமுதாய சிந்தனையோ உங்களிடம் இல்லை.
உங்களுக்கு தெரிந்ததை வைத்து இதுவரை எப்படி இந்த மாவட்ட மக்களிடம் காலத்தை ஓட்டுனீர்களோ அதுபோல் இன்னும் உள்ள காலம் இந்த மாவட்ட மக்களிடம் உங்களுக்கு தெரிந்ததை வைத்து ஓட்டுக்கள். எங்கள் சமூக சேவைகளில் குறுக்கிடாதீர்கள்.
அன்பு சகோதரரே!
இறுதியாக ஒன்று சொல்கிறேன் நீங்கள் எங்களுக்கு எதிரி அல்ல நாங்கள் இந்த மாவட்ட மக்களுக்கு எந்த நன்மை செய்தாலும் அல்லாஹ்விடம் கூலி கிடைக்கும் என்ற நல்லெண்ணத்தில் செய்கிறோம். உங்களைக் கொண்டு முடிந்தால் நீங்களும் இந்த மாவட்ட மக்களுக்கு நல்லதே செய்யுங்கள்.
அதை மீறி இதுபோன்ற வேலைகளை நீங்கள் மீண்டும் செய்தால், எங்களது கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர்கள் உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து டேமேஜ் சூட் போடுவோம் என இதன்மூலம் எச்சரிக்கிறேன்.
இப்படிக்கு,
M.இப்ராஹிம் கான்
தலைவர்
கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு






0 Comments