கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பிற்கு ஆசாரிபள்ளத்தை சார்ந்த ஒரு மாற்றுமத சகோதரி ஒரு கோரிக்கை மனு கொடுத்திருந்தார்.
அதாவது அவருடைய கணவர் ராஜ ரூபன் அவர்கள் சவுதி அரேபியா சென்றதாகவும் அங்கு சென்றவுடன் கொரோனோ தொற்றின் காரணமாக ரூமை விட்டு வெளியே வர முடியாமல் ஊருக்கும் வர முடியாமல் அவதிப்படுவதாகவும் உணவுக்கு வழியின்றி ரூமில் இருப்பதாகவும் கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு முயன்று எனது கணவர் இந்தியா வருவதற்கான ஏற்பாடுகளை செய்துதர முடியுமா என உதவி கேட்டிருந்தார்.
உடனே அவருடைய கோரிக்கையை கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு சவுதி மண்டலத்திற்கு உடனே அனுப்பி வைக்கப்பட்டது அங்கு இருக்கும் நமது சகோதரர்கள் உடனே அவரை தொடர்பு கொண்டு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தனர் அதில் குறிப்பாக கோட்டாரை சார்ந்த ஆரிப் அனைத்து வழி வகைகளையும் பல நபர்கள் அவரை தொடர்பு கொண்டு ஆலோசனைகளையும் வழிவகைகளையும் செய்து கொடுத்தார்.

குறிப்பாக அழகியமண்டபம் ஊரை சார்ந்த சகோதரர் சாதிக் அலி அவர்கள் இரண்டு நபர்களை மேற்படி சகோதரர் ரூமுக்கு அனுப்பி வைத்து அவருக்கு உணவுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி கொடுத்து அவர் வருவதற்கு வேண்டிய அனைத்து வழிவகைகளையும் செய்து கொடுத்தார் மேற்படி சகோதரர் சாதிக்அலிக்கும் ஜமாத் கூட்டமைப்பு சவுதி மண்டலத்தில் அனைத்து நிர்வாகிகளுக்கும் அவருக்கு கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக நன்றி கலந்த பாராட்டுக்கள் தெரிவிக்கப்படுகிறது