கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் பயணிகள் ரயில்கள் இயக்கப்படவில்லை. அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதற்காக சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. ஒரு மாநிலத்தில் இருந்து ஒரு மாநிலத்துக்கு வேலைக்கு வந்திருக்கும் வெளி மாநில தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஜூன் 1 ம் தேதி முதல் பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு திருச்சி இன்டர்சிட்டி ரயில் தினமும் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தினமும் திருச்சியில் இருந்து மதியம் 1 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்து சேருகிறது. இங்கிருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு செல்கிறது.
இந்த ரயிலில் பயணம் செய்ய நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் டிக்கெட் புக்கிங் கவுண்டர்கள் செயல்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 1 ம் தேதி 272 பயணிகள் புக்கிங் செய்து பயணம் செய்துள்ளனர். 2 ம் தேதி 300 பேரும், 3 ம் தேதி மதியம் 12.30 மணி நிலவரப்படி 234 பயணிகள் புக்கிங் செய்து இருந்தனர். 19 கோச் கொண்ட ரயிலில் 1 கோச் மட்டும் ஏசி கோச்சாக உள்ளது. மற்ற கோச்சுகள் சாதாரண கோச்சாக உள்ளது.
டிக்கெட் புக்கிங் செய்வதற்கு இ பாஸ் தேவையில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து திருநெல்வேலி செல்ல வேண்டும் என்றால் இ பாஸ் தேவையில்லை. அதேநேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மதுரைக்கு செல்ல வேண்டும் என்றால் இ பாஸ் தேவையில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து திருநெல்வேலி செல்ல வேண்டும் என்றால் இ பாஸ் தேவையில்லை. அதேநேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மதுரைக்கு செல்ல வேண்டும் என்றால் இ பாஸ் தேவை என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






0 Comments