குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அரசு அறிவிப்பின்படி, திருமண நிகழ்ச்சிகள் வீடுகளில் மட்டுமே 50 பேர் நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ளும் வகையில் நடத்தப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறும் வகையில் திருமண மண்டபங்களில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக புகார் வருகின்றன.

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மட்டுமே திருமண நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும். மேலும் திருமண மண்டப உரிமையாளர்கள் தங்களது மண்டபங்களில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கூடாது.

இதனை மீறும் பட்சத்தில் அந்த மண்டபங்கள் சீல் வைக்கப்பட்டு உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.