குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கடந்த 5 நாட்களில் மட்டும் 50 பேருக்கு மேல் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. சென்னையை போல் குமரியும் மாறிவிடுமோ என்ற அச்சம் குமரி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு பிறகு வெளி மாவட்டத்தில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருந்தது. இதனால் கொரோனாவால் பாதிக்கபப்டுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

அதன் தொடர்ச்சியாக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ளோரின் எண்ணிக்கை தற்போது அதிகமாக உள்ளது. கொரோனா பாதிப்பு தற்போது உள்ளூரில் பரவ துவங்கியுள்ளது.

தூத்தூர் கடலோர கிராமத்தில் கொரோனா பரவலால் இதுவரை 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் பங்குதந்தை ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரையில் இருந்து குமரிக்கு திரும்பிய அருமநல்லூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

குமரி-நெல்லை எல்லையான ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் கொரோனா பரிசோதனை பணியில் ஈடுபட்டிருந்த சுகாதாரத்துறையை சேர்ந்த ஒருவருக்கும், நாகர்கோவிலை சேர்ந்த விஞ்ஞானிக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இவ்வாறு கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் 50 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் சென்னையை போல் குமரியும் மாறுமோ என்ற பீதி பொதுமக்களிடம் மேலோங்கி காணப்படுகிறது.