தூத்தூர் கிராமத்தில் இதுவரை 10 பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தூத்தூர் கிராமத்தில் கொரோனா தொற்று ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதால் அப்பகுதி முழுவதும் அடைக்கப்பட்டு கட்டுப்பாடு வளையத்தில் கொண்டு வரப்பட்டது. கிராமத்தில் மொத்த பகுதியில் தடைகள் அமைக்கப்பட்டு அரசு பஸ்கள் உட்பட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன.

தூத்தூர் பகுதியில் உள்ள வங்கி, படிப்பகம், தபால் நிலையம் மற்றும் கடைகள் பூட்டப்பட்டது. மீன் வளத்துறை உத்தரவுப்படி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. மேலும் நித்திரவிளை மற்றும் அதன் ச்ற்றுவட்டார பகுதிகளில் மீன் விற்கவும் செய்யப்படவில்லை.

இந்நிலையில் நேற்று இப்பகுதியை சேர்ந்த 65 பேருக்கு சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இங்கு பங்குதந்தை உள்பட 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று 29 வயது பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, மொத்த எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

இந்த பெண்ணின் கணவரும் ஏற்கனவே தொற்று உறுதியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தூத்தூர் பகுதியில் மாவட்ட எஸ்பி ஆய்வு செய்தார்.