நாகர்கோவில் பகுதிகளில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.நாகர்கோவில் வடிவீஸ்வரம், கோட்டார் கம்பளம் சாலை அண்ணா பஸ் ஸ்டாண்டு, வேப்பமூடு சந்திப்பில் உள்ள மாநகராட்சி பூங்கா மற்றும் பூங்காவில் உள்ள உரமாக்கும் மையம் உள்ளிட்ட இடங்களை நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் ஆய்வு செய்தார்.
மேலும் அண்ணா பஸ் ஸ்டாண்டில் நடந்து வரும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது சுகாதார ஆய்வாளர் மாதேவன்பிள்ளை உட்பட மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர். நாகர்கோவில் ஜெயசேகரன் மருத்துவமனையின் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மருத்துவரை மருத்துவமனையிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

நாகர்கோவில் ஆணையர் ஆஷா அஜித் மற்றும் மாநகர் நல அலுவலர் கிங்சால் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று செய்யப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் மருத்துவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.