தமிழக் சட்டமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில் குமரி மாவட்ட சிவசேனா கட்சியின் மாவட்ட துணை தலைவரும், மதம்நாபபுரம் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க பொருளாளருமான ஜெகதேவ் தனது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் அழகியமண்டபத்தில் உள்ள குமரி மேற்கு மாவட்ட திமுக அலுவலத்தில் மாவட்ட செயலாளர் மனோதங்கராஜ் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
ஜெகதேவ் கடந்த சட்டமன்ற தேர்தலில் பதமநாபபுரம் தொகுதியில் சிவசேனா சார்பில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் திருவட்டார் ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஜாண்பிரைட், மாணவரணி அமைப்பளார் ஜாண்சன், திருவட்டார் ஒன்றிய கவுன்சிலர் ராஜு, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஷைனி ஹார்ட்டன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






0 Comments