கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் மட்டும் பொது பஸ் போக்குவரத்து செயல்பட்டது. தமிழக முதல்வர் உத்தரவு படி இதுவரை மண்டலத்துக்குள் இ பாஸ் இல்லாமல் அனுமதிக்கப்பட்டது நேற்று முதல் வரும் 30 ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது.

இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசியில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் வருவதற்கு இ பாஸ் பெற்றிருக்க வேண்டும் என்பதால் மாவட்டத்துக்குள் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் குறைந்தனர். பஸ்கள் இயக்கப்படாமல் இருப்பதால் இன்னும் கூடுதலாகவே பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. மாவட்டத்துக்குள் பயணம் செய்ய இ பாஸ் தேவையில்லை என்பதால் மாவட்டத்துக்குள் வழக்கமாக செல்வது போல் சென்று வந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டுவதால் இதுவரை மாவட்டத்தில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த பஸ்கள் நிறுத்தப்பட்டு மாவட்டத்துக்குள் இயக்கப்படும் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது.






0 Comments