குளச்சல் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மருத்துவர் சந்தோசம் தலைமையிலான குழுவினர் பொதுமக்கள் 74 பேருக்கு சளி மாதிரி எடுத்து சென்று பரிசோதிக்கப்பட்டது.

இதன் முடிவு நேற்று இரவு சுகாதாரத்துறைக்கு அனுப்பப்பட்டது. அதில் நகராட்சி பணியாளர் ஒருவர், அம்மா உணவக ஊழியர் ஒருவர், தனியார் நிதி நிறுவன ஊழியர் என 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
11 பேரையும் ஆசாரிப்பள்ளம் தனிமை வார்டுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நகராட்சி பணியாளர் ஏற்கனவே காய்ச்சலால் பாதிக்கபப்ட்டு ஒருவாரம் விடுப்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொற்று உறுதியானவர்கள் இருந்த பகுதிகளில் சுகாதாரத்துறையினரால் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தனர். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் சளி பரிசோதனை செய்யப்படவுள்ளது.






0 Comments