குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று கைமீறி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று மட்டும் 161 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தினமும், கொத்துகொத்தாக பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையை புரட்டி போட்ட கொரானா, தற்போது மற்ற மாவட்டங்களில் நுழைந்து தன்னுடைய ஆட்டத்தை அரங்கேற்றி வருகிறது. குமரி மாவட்டத்தில் தன்னுடைய கோரதாண்டவத்தை நடத்துகிறது.
நகர்புற பகுதிகள் மட்டுமின்றி கிராமப்புற பகுதிகள், கடலோர பகுதிகளிலும் தனது வேகத்தை காட்டி, மக்களை அல்லல்பட வைக்கிறது. கொரோனா பாதிக்கப்பட்டவகளுடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர் என தாண்டி, 3-ம் கட்டமாக சமூக பரவலை எட்டியதாக பரவலாக கூறப்படுகிறது.
நாள்தோறும் அதிகரித்து வரும் பாதிப்பால், மாவட்ட நிர்வாகம், சுதாகாரத்துரை அதிர்ச்சி அடைந்துள்ளது. சென்னையை போல் வீடு, வீடாக பரிசோதனை நடத்தினால் பாதிப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவதால் நோயின் தாக்கத்தை கட்டுபடுத்த முடியாத நிலையில் எல்லை மீறி சென்றுள்ளது.
கடந்த 4 நாட்களாகவே 100 ஐ தாண்டிய பாதிப்பு, நேற்று ஒரேநாளில் 161 ஆக உயர்ந்தது. மாவட்டம் முழுவதுமே பரவலாக பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களால் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை நிரம்பி உள்ளது. எனவே தனியார் பள்ளி, கல்லூரியில் கொரோனா கேர் சென்டர்களை மாவட்ட நிர்வாகம் உருவாக்கி வருகிறது.






0 Comments