ஐக்கிய அரபு நாடான - யு.ஏ.இ.,யில் சிக்கித் தவித்த, 179 இந்தியர்கள், சிறப்பு விமானத்தில், சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. ஊடரங்கால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்ப 'வந்தே பாரத்' என்னும் திட்டத்தை துவக்கியது.
இந்த திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மற்றும் கப்பல்களை பல நாடுகளுக்கு அனுப்பி அதன் மூலம் இந்தியர்கள் மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இரு தினங்களுக்கு முன் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் 36 வினமானங்கள் இயக்கப்பட்டது.

தொடர்ந்து, ஐக்கிய அரபு எமிரேட்சில் (UAE) தலைநகரான அபுதாபியில் இருந்து சிறப்பு விமானம் மூலமாக 179 பயணிகள் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர்.அதன்படி, நேற்று காலை, 7:30 மணிக்கு, சென்னை வந்த அவர்களுக்கு, பாதுகாப்பு நடவடிக்கையின் பேரில், விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டனர். விதிமுறைக்கேற்ப தனிமைப்படுத்துதலுக்காக அழைத்து செல்லப்பட்டனர்.விமான சேவைகள் ரத்து மேற்குவங்க மாநில அரசு, டில்லி, மும்பை, சென்னை, நாக்பூர், ஆமதாபாத், புனே ஆகிய, ஆறு நகரங்களில் இருந்து, இம்மாதம், 6ம் தேதி முதல், 19ம் தேதி வரை, அம்மாநிலத்திற்கு விமானங்கள் இயக்க தடை விதித்துள்ளது.

அதனால், சென்னையில் இருந்து, கோல்கட்டா, பேக்டோக்ரா நகரங்களுக்கு செல்ல வேண்டிய, ஐந்து விமானங்கள்; அங்கிருந்து சென்னைக்கு வரவேண்டிய, ஐந்து விமானங்கள் என, 10 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து நேற்று, 26 விமானங்கள், பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டன. பல்வேறு நகரங்களில் இருந்து, 25 விமானங்கள் சென்னைக்கு வந்தன.