தமிழகத்தில் நேற்று 2,285 ஆண் கள், 1,542 பெண்கள் என மொத்தம் 3,827 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான பா.வளர்மதி, நேற்று முன்தினம் காய்ச்சல், இருமலால் பாதிக்கப்பட்டார். பரிசோதனையில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், பா.வளர்மதி மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ அம்மன் கே.அர்ஜுனன் விரைவில் பூரண நலம்பெற இறைவனை வேண்டிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.






0 Comments