கன்னியாகுமரியில் கொரோனா தனிமை வார்டில் சிகிச்சை பெற்று வரும் வாலிபர்கள் ஒன்றுகூடி தனிமனித இடைவெளியின்றி குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

மன இறுக்கத்தைத் தவிர்க்கும் வகையில் ஆடிப்பாடுவதை அனுமதித்தாலும், கெடுபிடிகள் தளர்ந்து தனிமை வார்டுகளில் உள்ளவர்கள் வெளியில் சர்வ சாதாரணமாகச் சுற்றித்திரிவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக கொரோனா தொற்று அதிவேகமாகப் பரவி வருகிறது.
தினமும் 100 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கொரோனாவிற்கு 1232 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தனிமை வார்டுகளில் நோயாளிகள் சுதந்திரமா இருப்பதாக கூறப்படுகிறது.
ஆசாரிப்பள்ளம் அருகே பள்ளி ஒன்றில் செயல்படும் தனிமை வார்டில் சிகிச்சை பெற்று வரும் வாலிபர்கள் ஒன்றாகக்கூடி தனிமனித இடைவெளியின்றி குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த குத்தாட்டத்தில் 2 பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.






0 Comments