நாகர்கோவில் அருகே 70 அடி ஆழமுள்ள கிணற்றில் கிடந்த பெண் சடலத்தை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். கோட்டார் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, நாகர்கோவில் அருகே உள்ள வட்டவிளை பகுதியை சேர்ந்த சந்திரிகா (52).

சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள 70 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து கிடப்பதை பார்த்தவர்கள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் துரை தலைமையில் விரைந்து சென்று கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த பெண்ணை வெளியே கொண்டு வரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர் . சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.







0 Comments