தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் திட்டமிட்ட படி நடத்த வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
கொரோனா தொற்று யாரும் கணிக்க முடியாத அளவிற்கு சென்று கொண்டு இருக்கிறது. கொரோனாவை ஒழிக்க அடிப்படையான தேவை சுய கட்டுப்பாடு. கொரோனா தொற்றால் அமைச்சர்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் அரசியல் செய்யவும் தேவையில்லை. தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் திட்டமிட்ட படி நடத்த வேண்டும். முறைப்படி சட்டமன்ற தேர்தலை நடத்துவது நல்லது.

தனியார் பள்ளிகளில் 3 கட்டமாக கல்வி கட்டணத்தை வசூல் செய்யலாம் என கூறி இருப்பது மக்களை நோகடிக்காத வகையில் இருக்க வேண்டும். சாத்தான்குளம் காவல் நிலைய விவகாரத்தில் பொதுவாக போலீசாரை குற்றம் கூறுவது தவறு. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்த காவல் அதிகாரிகளை மட்டுமே குற்றம் சாட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.