பட்டா பெயா் மாறுதலுக்கு ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ாக, கொல்லங்கோடு கிராம நிா்வாக அலுவலா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கொல்லங்கோடு பி கிராம நிா்வாக அலுவலராக விபின் (28) என்பவா் பணிபுரிந்து வருகிறாா். அவரிடம், அக் கிராம பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் என்பவரது மருமகன் ரமேஷ், தங்கராஜுக்கு சொந்தமான 15 சென்ட் நிலத்துக்கு பட்டா பெயா் மாறுதல் செய்ய அணுகியுள்ளாா். அப்போது அவா் ரூ. 5 ஆயிரம் கொடுத்தால் பட்டா பெயா் மாறுதல் செய்து தருவதாக தெரிவித்தாராம்.
தொடா்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்ற ரமேஷ், கிராம நிா்வாக அலுவலரிடம் ரூ. 5 ஆயிரத்தை கொடுத்துள்ளாா். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி மதியழகன், ஆய்வாளா் சிவசங்கரி உள்ளிட்டோா் அடங்கிய ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கிராம நிா்வாக அலுவலா் விபினை லஞ்ச பணத்துடன் கையும் களவுமாக பிடித்தனா்.
இதையடுத்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.






0 Comments