தக்கலையில் இரவில் கார் மின்கம்பத்தில் மோதியதில் வெல்டிங் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

தக்கலை இரணியல் கோணம் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் .வெல்டிங் தொழிலாளி .மனைவி ஜெயா, இரண்டு குழந்தைகள் உள்ளனர். 30ம் தேதி மாலையில் ஜஸ்டின் தனது காரில் குமாரபுரத்திற்கு சென்றுவிட்டு இரவு 11 மணி அளவில் முட்டை காடு வழி தனது ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.
கார் மருந்துக்கோட்டை பட்டாணி குளம் அருகே வரும் போது கட்டுப்பாட்டை இழந்து ஓடி சாலையோரம் நின்ற மின்கம்பத்தில் மோதி பக்கச் சுவரில் இடித்து கவிழ்ந்தது. இதனால் மின்கம்பம் மற்றும் மதில்சுவரும் உடைந்தது. மின்தடை ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஜஸ்டின் பலத்த படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடைந்துபோன மின்கம்பத்தை மின்வாரியம் மாற்றும்போது அதை போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாத அளவுக்கு ஒதுக்கி நாட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






0 Comments