கொரோனா எதிரொலியால் பல மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து குமரி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வேகமாக பரவி வரும் கொரோனாவால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குமரி மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி செக்போஸ்டில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆரல்வாய்மொழி செக்போஸ்டில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.ஆரல்வாய்மொழியில் செக்போஸ்ட் அமைத்து சிப்ட் முறையில் போலீஸ், வருவாய்துறை, சுகாதார துறை அதிகாரிகள் தீவிரசோதனை நடத்தி வருகின்றனர்.
கொரோனா நோய் கண்காணிக்க மாவட்டதோறும் அதிகாரிகளை தமிழக அரசுநியமனம் செய்து உள்ளது. அதன் படி ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜோதிநிர்மலா குமரி மாவட்டத்துக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜோதி நிர்மலா ஆரல்வாய்மொழி செக்போஸ்டில் ஆய்வு செய்தார். பின்புசளிமாதிரி எடுக்கப்படும் அறிஞர் அண்ணாகல்லூரியை பார்வையிட்டு ஊழியர்களிடம் மிகவும் கவனமாக பணி செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார். அதன்பின்பு கொரோனா பாதித்த சீதப்பால் பகுதியில் தடுப்பு நடவடிக்கை பற்றி கேட்டு தெரிந்து தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த கூறினார்.
ஆய்வின் போது கலெக்டர் பிரசாந்த் வடநேரே, ஏ.எஸ்பி ஜவகர், தாசில்தார் ராஜேஸ்வரி உள்பட பலர் இருந்தனர்.






0 Comments