நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் பகுதிகளில் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

நாகர்கோவில் நகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணன்கோவில் தெலுங்கு செட்டித்தெருவில் உள்ள ஒரு பெண்மணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஏற்கனவே ஒரு டாக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது 2 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவின் பேரில் மாநகராட்சி நல அலுவலர் கின்சால் மேற்பார்வையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீடு மற்றும் வீட்டை சுற்றிலும் கிருமி நாசினி அடிக்கப்பட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்தனர்.






0 Comments