வடசேரி பஸ் ஸ்டாண்டில் செயல்படும் தற்காலிக சந்தை வியாபாரிகளுக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டது.
நாகர்கோவில் வடசேரி பஸ் ஸ்டாண்டில் செயல்பட்டு வரும் தற்காலிக சந்தையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த கடை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கிருமி நாசினி அடிக்கப்பட்டது.

மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவின் பேரில் மாநகராட்சி நல அலுவலர் கின்சால் மேற்பார்வையில் பாதிக்கப்பட்டவரின் கடை மற்றும் அவர் மொத்த கொள்முதல் செய்த கடையும் மூடப்பட்டது. மேலும் வடசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து தற்காலிக சந்தையில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரிக்கு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.