பெட்ரோல் டீசல் விலை உயர்வை தளர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென காங்கிரஸ் கட்சி சார்பில் இரண்டு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மின் கணக்கெடுப்பில் உள்ள குளறுபடிகளை மாநில அரசு தவிர்க்கவும் , உயர்ந்து கொண்டே போகும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தக்கலை வட்டார நகர காங்கிரஸ் சார்பில் முட்டைக்காடு , கல்குளம் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

முட்டைக்காடு போராட்டத்திற்கு வட்டார தலைவர் ஜாண்கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். தக்கலை யூனியன் சேர்மன் அருள் ஆன்றனி , ராபர்ட், அலெக்சாண்டர், பால்டிசைலஸ், ஆன்றனி கலந்து கொண்டனர். பத்மனாபபுரம் போராட்டத்திற்கு நகர தலைவர் ஹனுகுமார் தலைமை வகித்தார். துணை தலைவர் ஜோண்ஸ் இம்மானுவேல், இப்ராஹிம், ஹல்லாஜ், சாகுல் ஹமீது கலந்து கொண்டனர்.