நாகர்கோவில் வடசேரி பஸ் ஸ்டாண்டில் தற்காலிக காய்கறி மார்க்கெட் இடங்களை கமிஷனர் ஆய்வு
Alif Newson -
Wednesday, July 01, 2020
நாகர்கோவில் வடசேரி பஸ் ஸ்டாண்டில் இயங்கி வரும் தற்காலிக காய்கறி மார்க்கெட் செயல்படும் இடங்களை கமிஷனர் ஆய்வு செய்தார்.
நாகர்கோவில் வடசேரி பஸ் ஸ்டாண்டில் இயங்கி வரும் தற்காலிக காய்கறி மார்க்கெட், வடசேரி அம்மா உணவகத்தில் எத்தனை பேருக்கு தினமும் உணவுகள் வழங்கப்படுகிறது என்பதையும், வடசேரி மீன் சந்தை, வடசேரி பஸ் ஸ்டாண்டு நுண் உரம் செயலாக்க மையம் , வடசேரி ராஜபாதை நுண் உரம் செயலாக்க மையம் ஆகிய இடங்களை நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனர் ஆஷா அஜித் ஆய்வு செய்தார். ஆய்வின் போது சுகாதார ஆய்வாளர் பகவதிபெருமாள் , மாநகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.
0 Comments