குமரி மாவட்டத்தில் அசுரவேகத்தில் கொரோனா தொற்று பரவிவரும் நிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிரம்பி வழிகிறது. 800க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று பாதிக்கப்புடன் புதியதாக வருகின்றனர்களை தனிமைபடுத்தி தங்க வைத்து சிகிச்சை அளிக்க வேண்டியது அரசின் கடமையாகும். ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் நோயாளிகள் நிரம்பி வழிவதால், புதியதாக கொரோனா தாக்கம் குறைவாக உள்ள, நோய் அறிகுறிகள் இல்லாமல் வருகின்றனர்களை தங்க வைக்க ஏதுவாக மாவட்டம் முழுவதும் “கோவிட் கேர் சென்டர்கள்” உருவாக்கப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள தனியார் பள்ளியில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, இங்கு 150 நோயாளிகள் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இதன் தொடர்ச்சியாக நாகக்ரோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் தங்கவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இங்கு 160 பேரை தங்க வைக்க கட்டில்கள் போடப்பட்டு படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதன தொடர்ச்சியாக குமரி மாவட்டத்தில் மேலும் 5 கோவிட் கேர் சென்டர்கள்” அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கோணம் அரசு பாலிடெக்னிக் கட்டிடம், எஸ்எல்பி அரசு மேல்நிலைப் பள்ளி வகுப்பறைகள், அம்மாண்டிவிளை ஜெரோம் கல்லூரி, அழிக்கால் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி, தோவாளை லயோலா கல்லூரி ஆகியவற்றை கோவிட் கேர் செண்டர்களாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இங்கு கொரோனா அறிகுறிகள் இல்லாமல் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.






0 Comments