ஆரல்வாய்மொழியில் நடந்த திருமணத்தில் மணமகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் மணமக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
ஆரல்வாய்மொழி வடக்கூர் அகலிகை ஊற்று அருகே நடந்த திருமணத்தில் மணமகள் சொந்தஊர் சாத்தூர். கடந்த 1ம் தேதி மணமகள் மற்றும் உறவினர்கள் 9 பேர் வேன் மூலம் ஆரல்வாய்மொழி வந்தனர். வரும்போது ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணாகல்லூரியில் சளிமாதிரி எடுக்கப்பட்டு திருமணம் நடந்தது. அன்று இரவே மணமகளின் உறவினர்கள் சாத்தூர் சென்று விட்டனர். காலையில் சளிமாதிரி பரிசோதனை வந்தது. அதில் மணப்பெண்ணுக்கும் அவளது பெண் உறவினருக்கும் கொரோனா இருப்பது உறுதி ஆனது.

கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சுகாதாரத்துறை, வருவாய்துறை. பஞ்சாயத்து நிர்வாகம், போலீஸ் வந்து மணமகளை 108 ஆம்புலன்ஸ் முலம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். மணமகள் கொரோனா வார்டுக்கும் மணமகன் ஆஸ்பத்திரியிலும் தனிமைபடுத்தப்பட்டார். மேலும், மணமகன் உறவினர் வீட்டில் உள்ள 18 பேருக்கு சளிமாதிரி எடுக்கப்பட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தபட்டது. ஆரல்வாய்மொழியில் கொரோனா நோய் வந்தவுடன் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.