பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து ஆட்டோ கயிறு கட்டி இழுக்கும் போராட்டம் தேரூரில் நடந்தது.
தேரூர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் வட்டார காங்., தலைவர் காலபெருமாள் தலைமையில் நடந்த போராட்டத்தில் வர்த்தகர் அணி தலைவர் அருண், மகிளா காங்., தலைவர் ஹெலன், தேரூர் நகர காங்., தலைவர் பெருமாள் , சுப்பிரமணியன், அழகப்பன், சுடலையாண்டி , சந்திரன் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆட்டோவை கயிறுகட்டி இழுத்து தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.