தக்கலை சந்தைக்கு விற்பனைக்கு வரும் விவசாயப் பொருட்கள் மீது அதிக தீர்வை வசூலிப்பதை தவிர்க்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனதா தளம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பத்மநாபபுரம் நகர மத சார்பற்ற ஜனதா தளம் செயற்குழு கூட்டம் மருந்து கோட்டையில் நடந்தது. நகர தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். இளைஞரணி தலைவர் நிஜாமுதீன் வரவேற்றார். மாவட்ட இளைஞரணி தலைவர் கிறிஸ்டோபர், வட்டாரத் தலைவர் அருள்தாஸ், நிர்வாகிகள் ராஜசேகர், ஜாண்ரோஸ், குமரேசன், ஐயப்பன், ஜீவானந்தம் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் தக்கலை மார்க்கெட்டுக்கு வரும் விவசாய பொருட்கள் மீது அதிக தீர்வை வசூலிப்பதை தவிர்க்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.






0 Comments