தம்பத்து கோணம் பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநகராட்சி ஊழியரின் வீடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் செய்யப்பட்டுள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கமிஷனர் ஆய்வு செய்தார்.
நாகர்கோவில் மாநகராட்சி ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் வசித்த தம்பத்துகோணம் , அதை சுற்றியுள்ள பகுதிகளில் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கமிஷனர் ஆஷா அஜித் ஆய்வு செய்தார். சுகாதார ஆய்வாளர் ராஜா மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் இருந்தனர். ஆய்வின் போது முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஊட்டுவாழ்மடம் வசந்த் நகர் பகுதியில் சு கட்டுமான பணிகள் நடந்து வரும் கட்டிடங்களில் டெங்கு கொசுப்புழு உற்பத்தி ஆகிறதா என ஆய்வு செய்தனர்.