கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக பணிபுரிந்து வரும் சமூக சேவை நிறுவனத்துக்கும், பணிபுரியும் சமூக சேவகர்களுக்கும் சுதந்திர தின விருது பெற விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக பணிபுரிந்து வரும் சேவை நிறுவனத்துக்கும், சமூக சேவகர்களுக்கும் சுதந்திர தின விருது பெற விண்ணப்பத்தினை வரும் 15ம் தேதிக்குள் நாகர்கோவில் மாவட்ட கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலரிடம் பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி எண் 04652 278404 தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.






0 Comments