குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது.

குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தற்போது வெளி இடங்களில் இருந்து வருபவர்கள் குறைந்துள்ள நிலையில், காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட்டுகளில் பரவ தொடங்கியுள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதிகாரிகள், காவல்துறையினர், நீதிமன்ற பணியாளர்கள் என அரசு துறையில் உள்ளவர்களையும் கொரோனா ஆட்டிபடைத்து வருகிறது. கடந்த சில நாள்களாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணமாகவே காணப்படுகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 105 பேருக்கு தொற்று உறுதியானது.
இந்நிலையில் நேற்று 66 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 1000 ஐ கடந்தது.






0 Comments