குமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மதுக் கடைகளையும் அரசு உடனடியாக மூட வேண்டும் என குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலா் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
குமரி மாவட்டத்தில் காரோனா தொற்று அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனா். இந்நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் அனைத்தும் மாலை 5 மணிக்கு மேல் இயங்கக்கூடாது என புதிய கட்டுப்பாடு விதித்துள்ள அரசு, மதுக்கடைகள் மட்டும் இரவு 8 மணி வரைத் திறந்திருக்கலாம் என உத்தரவிட்டுள்ளது. இது நோய் தொற்று பரவுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்குமே தவிர, நோயை தடுப்பதற்கு தீா்வாகாது என மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனா். எனவே, மக்கள் நலன் கருதி இம்மாவட்டத்தில் அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளாா்.






0 Comments