கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க தீவிரமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவுறுத்தலின் படி கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.

தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்கூர் பகுதிகளில் தோவாளை அரசு ஆரம்ப சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று காய்ச்சல் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டனர். குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடந்தது.






0 Comments