நாகர்கோவில் அருகே இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் நாகர்கோவிலில் எம்.எல். ஏ மீது போக்சோசட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது பற்றி போலீசார் தெரிவித்ததாவது,
நாகர்கோவில் வாகையடி தெருவைச் 15 வயது மதிக்கத்தக்க 10 ம் வகுப்பு மாணவி காணாமல் போனதாக அவரது பொற்றொர்கள் கொடுத்த பகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். பின்னர் அந்த பெண்ணை போலீசார் ஒரு வாலிபருடன் மீட்டவட்டார். பின்னர் போலீசார் அந்த மாணவியிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

உடனே போலீசார் இது பற்றி குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் அந்த பெண்ணிடம் விசாரணை செய்தார். விசாரணையில் கடந்த 2017 ம் ஆண்டு நாகார்கோவில் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் அதனைத் தொடர்ந்து பறக்கையைச் சேர்ந்த வாலிபர், கோட்டார் கம்பளத்தை சேர்ந்த ஒருவர் மற்றும் ஆட்டோ டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிவித்துள்ளார். உடனே இது பற்றி குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் நாகர்கோவில் அனைத்து மகளீர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் இது சம்பந்தமாக முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை தேடிவருவதாகத் தெரிகிறது. இந்நிலையில் அ.தி.மு.க விலிருந்து நேற்று முன்தினம் முருகேசனை நீக்கி முதல்வர் மற்றும் துணை முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.