நாகர்கோவில் வடசேரி பஸ் ஸ்டாண்டில் மீண்டும் செயல்பட உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் 166 கடைகள் செயல்பட கூடிய வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்தைகளை திறந்த வெளிகளில் இயங்க கூடிய வகையில் அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி பல மாவட்டங்களில் பஸ்கள் ஓடாததால் பஸ் ஸ்டாண்டுகள் தற்காலிக மார்கெட்டுகளாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வடசேரி கனகமூலம் சந்தையில் செயல்பட்ட கடைகள் எல்லாம் வடசேரி பஸ் ஸ்டாண்டில் ஏற்பாடு செய்யப்பட்ட தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் செயல்பட்டது. அதில் வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவுப்படி வடசேரி பஸ் ஸ்டாண்டில் செயல்பட்டு வந்த தற்காலிக காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது.
இந்நிலையில் வடசேரி பஸ் ஸ்டாண்டில் செயல்பட்டு வந்த தற்காலிக காய்கறி மார்க்கெட்டை மீண்டும் செயல்பட நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் ஆணையர் ஆஷா அஜித் தலைமையில் மாநகர் நல அலுவலர் கிங்சால் மேற்பார்வையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்காலிக காய்கறி மார்க்கெட் செயல்பட கூடிய வகையில் ஆரம்ப கட்ட பணிகளை அதிகாரிகள் எடுத்து வந்தனர். அதன்படி வடசேரி பஸ் ஸ்டாண்டில் மீண்டும் செயல்பட உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் 166 கடைகள் அமைக்க கூடிய வகையில் கடைகளின் வரிசை எண்கள் போடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.






0 Comments