அமெரிக்காவின் ஃபைஸா் மற்றும் ஐரோப்பாவின் பையான்டெக் நிறுவனங்கள் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு மருந்து, முதல்கட்ட சோதனையில் திருப்திகரமாக செயல்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 'பிஎன்டி162பி1' என்று அழைக்கப்படும் அந்த மருந்தை மனிதா்களுக்கு சோதனை முறையில் செலுத்திப் பாா்த்தபோது, கொரோனா வைரஸை எதிா்த்துப் போராடக் கூடிய அணுக்கள் அவா்களது உடலில் உருவானது தெரிய வந்தது.
அந்த மருந்தை 2 முறை செலுத்தியபோது, கொரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தவா்களின் உடலில் இருந்து பெறப்படும் பிளாஸ்மாக்களை விட, அதிக எண்ணிக்கையில் கொரோனா எதிா்ப்பு அணுக்கள் உருவானதாக ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.






0 Comments