கன்னியாகுமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் நேற்று கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
அரசு அறிவிப்பின் படி கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று எந்தவிதமான தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்குக்கு என்பதால் நேற்று அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. காய்கறி சந்தைகள், மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. கோட்டார், நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், களியக்காவிளை, கருங்கல், குளச்சல், ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. மாவட்டத்தில் கடைகள் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்கப்பட வேண்டும் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவித்திருந்ததால் அத்தியாவசிய பொருட்களை காலையிலேயே வாங்க வந்துவிட்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.

இறைச்சி கடைகள் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு என்பதால் காலையில் இருந்து மாலை வரை மாவட்டத்தின் பல பகுதிகளில் இறைச்சி கடைகள் செயல்பட்டது. மாவட்டத்தில் தினமும் செயல்படும் இறைச்சி கடைகள் உண்டு. வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் செயல்படும் இறைச்சி கடைகளும் உண்டு. நாளை முழு ஊரடங்கு என்பதால் இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. அசைவ பிரியர்கள் சமூக இடைவெளி கடைபிடித்து இறைச்சி வாங்கி சென்றனர்.