நாகர்கோவில் மாநகராட்சி அவிட்டம் திருநாள் மகாராஜா மைதானத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தையை ஆணையர் ஆய்வு செய்தார். நாகர்கோவில் வடசேரி பஸ் ஸ்டாண்டில் செயல்பட்டு வந்த தற்காலிக காய்கறி சந்தையில் உள்ள வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வடசேரி பஸ் ஸ்டாண்டில் செயல்பட்டு வந்த தற்காலிக காய்கறி சந்தை மூடப்பட்டது. இதனால், நாகர்கோவில் மாநகராட்சி அவிட்டம் திருநாள் மகாராஜா மைதானத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தையில் கூடுதலாக கடைகள் செயல்பட துவங்கி உள்ளது.
இதனால், காய்கறி வாங்குவதற்கு மக்கள் அதிகம் வருவார்கள். கடை வைத்திருப்பவர்கள் அரசின் நடைமுறைகளை கடைபிடிக்கின்றனரா என்பதையும், நுண் உர செயலாக்க மையத்தையும் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் ஆய்வு செய்தார். சரலூர் மீன் சந்தையில் மீன் வியாபாரிகளிடம் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வியாபாரம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. சுகாதார ஆய்வாளர் சத்யராஜ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.