குமரி மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலய பங்குப்பேரவை சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பங்குத்தந்தை செல்வராயர் தலைமை வகித்தது அர்ச்சித்து துவக்கி வைத்தார்.
உதவிப் பங்குத்தந்தை அந்தோணி ஜெபஸ்டின் ரூபன், பங்குப்பேரவை துணைத்தலைவர் விக்டர் நவாஸ், செயலாளர் குரூஸ் அருள் விஜி, பொருளாளர் டேவிட் ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அதிகாரி செந்தில் கபசுர குடிநீரை வழங்கினார். பேரூராட்சி வரி வசூலர் செல்வவதி, மார்ட்டின், கிரிஸ்டோபர், முத்தரசு கலந்து கொண்டனர்.