குமரி மாவட்டத்தில் கோவிட் கேர் சென்டர்களில் இன்று முதல் 5 வேளை உணவு தனியார் உணவகங்கள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் கடந்த 19-ம் தேதி அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, விஜய பாஸ்கர் ஆகியோர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தினர். அப்போது கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மூலம் உணவு வழங்குவதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே மற்றும் தனியார் உணவக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து அமைச்சர் விஜய பாஸ்கர் தனியார் உணவகங்கள் மூலம் குமரி மாவட்டத்திலுள்ள கொரோனா நோயாளிகளுக்கு, தரமான உணவு வழங்க வேண்டும் என முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர். அதன்படி, அமைச்சர் விஜயபாஸ்கர் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரேக்கு, தனியார் உணவகங்கள் வாயிலாக தரமான உணவுகள் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி இன்றுமுதல் (22-07-2020) கொரோனா பாதுகாப்பு மையங்களில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகளுக்கு, தனியார் உணவகங்கள் மூலமாக உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.
தற்போது, ஆசாரிப்பள்ளம் பெல்பீட்ல் மெட்ரிக் பள்ளியில் 147 பேரும், எஸ்எல்பி மேல்நிலை பள்ளியில் 300 பேரும், கோணம் அண்ணா பல்கலைகழக பொறியியல் கல்லூரியில் 375 பேரும், கோணம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 200 பேரும், கோணம் பாலிடெக்னிக் கட்டிடத்தில் 250 பேரும், கோட்டார் அரசு ஆயுர்வேத கல்லூரியில் 230 பேருக்கும் உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.






0 Comments