மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர்களுக்கு எதிரான கொள்கைகளை எதிர்த்து இந்தியா முழுவதும் தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடத்த விடுத்ததை தொடர்ந்து தமிழ்நாட்டில் சிஐடியு, எல்பிஎப், ஐஎன்டியுசி, எச்எம்எஸ், எஐடியுசி, எம்எல்எப் உள்ளிட்ட சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடந்துவது என முடிவு செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் கலெக்டர் ஆபீஸ், கோட்டார் தபால் நிலையம், வெட்டூர்ணிமடம், வடசேரி, மணிமேடை, பார்வதிபுரம், தக்கலை, ராஜாக்கமங்கலம், திங்கள் நகர், கருங்கல், கொல்லங்கோடு, களியக்காவிளை, மார்த்தாண்டம், மேல்புறம், ஆரல்வாய்மொழி, திட்டுவிளை, குலசேகரம், திருவட்டார் உட்பட 516 இடங்களில் நடந்தது. நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் தங்கமோகனன், ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் அனந்த கிருஷ்ணன், மீன் சங்க மாநில சம்மேளன பொதுச்செயலாளர் அந்தோணி கலந்து கொண்டனர்.