மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதியில் நான்கு குழந்தைகள் உட்பட 15 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. கழுவன்திட்டை ஆர்.சி. தெரு பகுதியில் இதுவரை 18 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஆசாரிப்பள்ளம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிட்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதியில் ஒரு கர்ப்பிணி பெண்ணிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதைதொடர்ந்து சுகாதாரத்துறையினர் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சளி பரிசோதனை மேற்கொண்டனர். இதில் நான்கு குழந்தைகள் உட்பட 14 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதைதொடர்ந்து அந்த 14 பேரையும் ஆசாரிப்பள்ளம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைதொடர்ந்து, திக்குறிச்சி பகுதியை சீல் செய்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளனர்.
திக்குறிச்சி பகுதியில் மொத்தம் 15 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நோய் தொற்று அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.






0 Comments