நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசிக்கும் வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கப்பட்டது.

நாகர்கோவில் வடிவீஸ்வரம் கீழரத வீதி , கணேசபுரம் பகுதியில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கமிஷனர் ஆஷா அஜித் உத்தரவின் பேரில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் வசிக்கும் வீடு , சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிருமிநாசினி அடிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் மாதேவன் பிள்ளை தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் பாதிக்கப்பட்ட நபர்கள் வீடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கப்பட்டது.






0 Comments